வந்தே பாரத்
இந்தியாவின் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அதிவேக ரயில் சென்னை மற்றும் மைசூர் இடையே இயக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா சுற்றுப்பயணமாக பெங்களூரு சென்றுள்ளார். அங்குதான் ரயிலை துவக்கி வைத்தார். தென்னிந்தியாவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுவாகும்.
இந்த விரைவுவண்டியின் ஒரு அலகுக்கான தயாரிப்புச் செலவினமானது ரூ.100 கோடியாகும். இருப்பினும் அடுத்தடுத்த தயாரிப்புகளின் போது இந்த தயாரிப்புச் செலவு இன்னும் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.ஐரோப்பாவில் இருந்து இதனையொத்த ஒரு தொடருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் அதன் விலையோடு ஒப்பிடும் போது தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதன் விலையானது 40% குறைவானதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
சென்னை TO கோவைக்கு சீறிப்பாய்ந்த வந்தே பாரத்:
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை
திறந்துவைத்து பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை
எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு
சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், பேட்டரி கார் மூலமாக 10வது
நடைமேடையை அடைந்த பிரதமர் மோடி, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வந்தே பாரத்
ரயிலை, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோருடன் இணைந்து பார்வையிட்டார்.
வகைகள்:
v வந்தே பாரத் 1.0 (Train 18) - AC இருக்கை மட்டும்
v வந்தே பாரத் 2.0 - AC இருக்கை மட்டும்
v வந்தே பாரத் 3.0 (Train 20) - AC படுக்கை வசதியுடன்
v வந்தே பாரத் 4.0
வேகம்:
ஒரு மணி நேரத்துக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும். அதாவது, டெல்லியிலிருந்து 752 கி.மீ தூரத்தில் உள்ள வாரணாசியை 8 மணி நேரத்தில் கடந்து விடும்.
கண்காணிப்பு:
அனைவரும் பொது போக்குவரத்தில்
எதிர்பார்க்கும் வசதிகளுள் ஒன்றான கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அனைத்து பெட்டிகளிலும்
பொருத்தப்பட்டிருக்கும்.
மதிப்பு:
இந்த ரயிலின் டிக்கெட் கட்டணத்தைப் பொறுத்தவரையில்,
சென்னையில் இருந்து மைசூருவுக்கு எகனாமி வகுப்புக்கு கட்டணம் ரூ.921 ஆகவும், எக்ஸிகியூட்டிவ்
கட்டணம் ரூ.1880 ஆகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, மைசூருவிலிருந்து
பெங்களூருக்கு எகனாமி வகுப்புக்கு 368 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் வகுப்புக்கு 768 ரூபாயும்
கட்டணம்.
நேர அட்டவணை:
இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு
புறப்படும். காட்பாடி சந்திப்பை 7.21 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 7.25
மணிக்கு புறப்படும். பின்னர் ஜோலார்பேட்டை ஸ்டேஷனுக்கு 8.25 மணிக்கு வந்து,
பெங்களூரு சந்திப்புக்கு 10.15 மணிக்கு சென்று, 10.20 மணிக்கு புறப்படும். இந்த
ரயில் மைசூருவுக்கு 12.20க்கு சென்றடையும்.
ரிட்டன் நேரம்:
மைசூரில்
இருந்து மதியம் 1.05 மணிக்கு கிளம்பி, பெங்களூர் சிட்டி ஸ்டேஷனுக்கு 2.50 மணிக்கு
வந்து 2.55 மணிக்குப் புறப்படும். ஜோலார்பேட்டையில் மாலை 4.50 மணிக்கு சென்று
காட்பாடி சந்திப்புக்கு காலை 5.36 மணிக்கு வந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு
இரவு 7.30 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த வழியில் மொத்த பயணம் 6 மணி 10
நிமிடங்கள் இருக்கும்.
பயண தொகையைப் பார்த்து இது நமக்கு ஏற்றது அல்ல எனத் தோன்றலாம். ஆனால் குறைந்த விலையில் ஒரு சர்வதேச விமான பயணத்தின் வசதிகளையும், அனுபவத்தையும் பெற விரும்புகிறவர்கள் கண்டிப்பாக ஒரு முறை பயணித்துப் பார்க்கலாம்.